உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று அரசு சார்பில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்களில் பங்கேற்றுவிட்டு மதியம் 12:00 மணிக்கு ராஜ்நிவாசிற்கு திரும்பினார்.இந்நிலையில், மதியம் 2:00 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு இ-மெயில் வந்தது. அதில், கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்ததை கண்டு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து பெரியக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதனைத் தொடர்ந்து, பெரியக்கடை போலீசார் விரைந்து சென்று கவர்னர் மாளிகை சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர்.சீனியர் எஸ்.பி,. கலைவாணன், எஸ்.பி., ரகுநாயகம் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், மற்றும் மோப்ப நாய் ராமு, டோனி ஆகியவற்றுடன் விரைந்து சென்று கவர்னர் மாளிகை முழுவதும் மதியம் 2:15 மணி முதல் மாலை 4:15 மணிவரை இரண்டு மணி நேரம் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்ற பிறகே போலீசார் நிம்மதியடைந்தனர்.

தொடர் மிரட்டல் : அதிகாரிகள் கலக்கம்

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக அரசின் முக்கிய அலுவலகங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் பிரெஞ்சு துாதரகத்திற்கும், கடந்த 2ம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.நேற்று முன்தினம் தீயணைப்பு நிலையத்திற்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் நேற்று கவர்னர் மாளிகைக்கு மீண்டும் மிரட்டல் வந்துள்ளது.தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், போலீசில் வெடிகுண்டு செயலிழிப்பு நிபுணர்கள் குழுவினர் மற்றும் மோப்ப நாய் குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ