தமிழ்ச்சங்கத்தில் நுால் அறிமுக விழா
புதுச்சேரி: வெற்றித் தமிழர் பேரவை சார்பில், கவிஞர் வைரமுத்து எழுதிய 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நுால் அறிமுக விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வெற்றித்தமிழர் பேரவையின் புதுச்சேரி அமைப்பாளர் கோவிந்தராசு வரவேற்றார். கவியரசர் கண்ணதாசன் கழக தலைவர் தேவதாஸ், காங்., பொதுச் செயலாளர் மருதுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி சமுதாய கல்லுாரி முன்னாள் முதல்வர் சந்திரசேகர், லயன்ஸ் சங்க சம்ராஜ் , வேணுகோபால், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். பேரவையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாலதி ராமலிங்கம் நன்றி கூறினார்.