உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சிங்கப்பூர் தமிழறிஞர் முத்துகிருஷ்ணன் எழுதிய 'குறளறனும் மனுமுரணும்' எனும் திருக்குறள் ஆய்வு நுால் வெளியீட்டு விழா நடந்தது. சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். சங்கச் செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். விழாவில் 'குறளறனும் மனுமுரணும்' எனும் நுாலினை அமைச்சர் சிவக்கோழுந்து வெளியிட்டார். பேராசிரியர் அருளியார் நுால் ஆய்வு செய்து சிறப்புரை ஆற்றினார். விழாவில், அமைச்சர் சிவக்கொழுந்திற்கு 'குறள்நெறிச் செம்மல்' எனும் விருது வழங்கப்பட்டது. நுாலாசிரியர் முத்துகிருஷ்ணன் ஏற்புரை ஆற்றினார். சங்கப் பொருளர் அருள்செல்வம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, வேணுகோபால், தமிழறிஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முனைவர் அருள்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை