பள்ளி நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கல்
புதுச்சேரி: தேசிய நல்லாசிரியர் விருது இறுதி சுற்றில் பங்கேற்ற முத்திரையர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியருக்குவழங்கப்பட்ட புத்தகங்கள்,பள்ளி நுாலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.டெல்லி, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் 2024ம் ஆண்டு தேசியநல்லாசிரியர் விருதுக்கான இறுதி சுற்றில் பங்கேற்ற 152 ஆசிரியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான நேஷனல் புக் டிரஸ்ட்புத்தகங்களை வழங்கப்பட்டது.விருதுக்கான இறுதி சுற்றில் பங்கேற்ற முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராமிற்கு வழங்கப்பட்ட புத்தகங்களை பள்ளிக்கு ஒப்படைத்தார்.இதையடுத்து, அந்த புத்தகங்களை பள்ளியின் துணை முதல்வர் கோவிலாம்பாள்,மாணவர்களின் பயன்பாட்டிற்காக நுாலக ஆசிரியர்தியாகராஜனிடம் வழங்கினார். இதில்,பள்ளியின் பொறுப்பாசிரியை மீனாட்சி உடனிருந்தார்.