மேலும் செய்திகள்
பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு
19-Mar-2025
புதுச்சேரி: போத்தீஸ் வாடிக்கையாளர்களின் திருவிழாவையொட்டி, பரிசு வழங்குவதற்கான கூப்பனை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி போத்தீஸ் நிறுவனம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களின் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கூப்பன்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழாவில், முதல் பரிசு கார், இரண்டாம் பரிசாக, ஸ்கூட்டி, டி.வி., வாஷிங்மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.குலுக்கல் முறையில், பரிசு கூப்பன்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி, போத்தீசில் நேற்று நடந்தது. பரிசு கூப்பனை, எஸ்.பி., செல்வம் தேர்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், போத்தீஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
19-Mar-2025