உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில் பெட்டிக்கடையில் மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இன்று (நவ.,17) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, கோவிந்தசாமி தெருவை சேர்ந்த செல்வம் என்பவர் நடத்திவரும் பெட்டிக்கடையில் சோதனை நடத்தியதில், மதுபான பாட்டில்கள் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரிந்தது. அதையடுத்து, சிதம்பரம் நகர போலீசர், செல்வம், 50: மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரது கடையில் இருந்த 39 குவாட்டர் மது பாட்டில்கள் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !