மேலும் செய்திகள்
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து குழந்தை சாவு
16-Dec-2024
பாகூர் : விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பூமியான்பேட்டை, பாவாணர் நகரை சேர்ந்தவர் கணேஷ் மகன் திவேஷ் 19, இவரும், அதே பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் மகன் கிறிஸ்டோபர், 16; என்பவரும் நேற்று முன்தினம் மதியம் கடலுாருக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை, திவேஷ் ஒட்டினார்.நோணாங்குப்பம் அடுத்த டோல்கேட் பகுதியில் எதிரே சென்ற தனியார் பஸ்சை, முந்தி செல்ல முயன்றபோது, திடீரென பைக் மீது பஸ் மோதியது. இதில், திவேஷ் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதில், படுகாயமடைந்த கிறிஸ்டோபர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
16-Dec-2024