மின் ஒயர் அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் மின் ஒயர் அறுந்து விழுந்து, தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் படுகாயமடைந்தார். முதலியார்பேட்டை, ஜெயமூர்த்தி ராஜா நகர், கலைவாணி வீதியில் நேற்று முன்தினம் ஒருவர் தனது மகனுடன் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது அவ்வழியாக சென்ற மின் ஒயர் அறுந்து விழுந்தது. இதில் ஸ்கூட்டரில் செ ன்ற தந்தை, மகன் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த சிறுவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மின் ஒயரை சரி செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.