உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரைனி புளூம்ஸ் சர்வதேச பள்ளி மாணவர்கள் சாதனை

பிரைனி புளூம்ஸ் சர்வதேச பள்ளி மாணவர்கள் சாதனை

புதுச்சேரி: திருக்கனுார் பிரைனி புளூம்ஸ் சர்வதேச பள்ளி மாணவர்கள் சுதந்திர தின கலை நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்றனர். புதுச்சேரி அரசு சார்பில், காந்தி திடலில் நடந்த 79வது சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில், திருக்கனுார், பிரைனி புளூம்ஸ் சர்வதேச பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி கல்வித்துறை சார்பில், முதல் பரிசினை முதல்வர் ரங்கசாமி பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். விருது பெற்ற மாணவர்களை பள்ளி துணை சேர்மன், முதல்வர் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ