உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் நாளை துவங்குகிறது

மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் நாளை துவங்குகிறது

புதுச்சேரி: சிறப்பு சலுகையில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் நாளை துவங்கி அடுத்த மாதம் 30ம் தேதி வரை நடக்கிறது. தவளக்குப்பம், சுண்ணாம்பாறு தெற்கு ஆற்றங்கரை சாலை, எம்.ஏ., சண்முகம் செங்கேணியம்மாள் சதுக்கம் பகுதியில், புதுச்சேரி புற்றுநோய் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், (ஒமேகா மருத்துவமனை) இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம், நாளை (30ம் தேதி) துவங்கி அடுத்த மாதம் 30ம் தேதி வரை நடக்கிறது. 3,999 ரூபாயில் செய்யப்படும், புற்றுநோய் பரிசோதனையை, சிறப்பு சலுகையில், 999 ரூபாயில் செய்யப்படுகிறது. இதில், டிஜிட்டல் மேமோகிராபி பரிசோதனை, மார்பக நிபுணர் ஆலோசனை, பாப் ஸ்மியர் பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, சீரம் கிரியோட்டினின் பரிசோதனை, கல்லீரல் செயல்பாட்டுப் பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், 0413 2970420, 7550003033 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !