உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதுகு வலியால் அவதி கொத்தனார் தற்கொலை

முதுகு வலியால் அவதி கொத்தனார் தற்கொலை

புதுச்சேரி, : முதுகு வலியால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.கருவடிக்குப்பம், மேஜர் சரவணன் நகர், கம்பன் வீதியைச் சேர்ந்தவர் அன்புராஜ், 40; கொத்தனார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் முதுகில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் இவர் கடுமையான முது குவலியால் அவதிப்படும் போது மது குடிப்பது வழக்கம். நேற்று மாலை முதுகுவலி அதிகமாகவே மனமுடைந்த அன்புராஜ், அவர், வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி ஜீவா கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ