பி.எஸ்.என்.எல்., சிம் கார்டு ரூ. 1 க்கு விற்பனை
புதுச்சேரி: தீபாவளி சிறப்பு சலுகையாக ஒரு மாதத்திற்கு பி.எஸ்.என்.எல்., 4 ஜி சிம் கார்டு ரூ. 1க்கு வழங்கப்படுகிறது. புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழாக்கால சலுகையாக நேற்று (15ம் தேதி) முதல் வரும் நவம்பர் 15ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு, 4ஜி சிம் கார்டு ரூ. 1 க்கு வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டில் ஒரு மாதத்திற்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். கஸ்டமர் சர்வீஸ் சென்டர்களான புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையம் மற்றும் அனைத்து ரீட்டைலர் கடைகளிலும் பெற்று கொள்ளலாம்.