உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்: புதுச்சேரியில் இருந்து பெரிய விமானங்கள் கவர்னர்  தகவல்

பட்ஜெட்: புதுச்சேரியில் இருந்து பெரிய விமானங்கள் கவர்னர்  தகவல்

  கவர்னர்  உரையில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:    தற்போது, புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதை 1,500 மீட்டர் மட்டுமே உள்ளதால், பெரிய விமானங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. இதைத் தீர்க்கும் வகையில், ஓடுபாதை 2,300 மீட்டராக நீட்டிக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏ–320, ஏ321 வகை பெரிய விமானங்களை இயக்க முடியும். மேலும், புதுச்சேரிக்கும் நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இடையிலான விமான சேவை விரிவடையும்.புதிய பயணிகள் முனையம், நவீன விமான நிலைய வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கூடுதல் விமான நிறுத்துமிடங்கள் 4,800 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும், புதுச்சேரி இந்த பகுதியின் முக்கிய விமானப் போக்குவரத்து மையமாக உருவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி