உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்: மின்துறைக்கு ரூ. 2,740. 60 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்: மின்துறைக்கு ரூ. 2,740. 60 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் மின்துறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:  * திருபுவனை துணை மின் நிலையத்திற்கு பதிலாக ரூ. 60 கோடி மதிப்பீட்டில் புதிய 110/22 கிலோவோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.  * கோர்க்காடு, தேத்தாம்பாக்கம் மற்றும் காலாப்பட்டு துணை மின் நிலையங்களில் உள்ள மின்மாற்றிகளின் திறன் ரூ.17.70 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.  * மின் ஆற்றலை சேமித்து தேவைப்படும்போது விநியோகிக்க ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 50 மெகாவாட், தேர்ந்தெடுக்கப்பட்ட 10 துணை மின் நிலையங்களில் தலா 5 மெகாவாட் திறன்மிக்க மின்கல சேமிப்பு அமைப்பு நிறுவப்படும்.  * தெலுங்கானாவில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தின் 2ம் கட்ட மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 50 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்.  * இதற்காக, மின்துறைக்கு ரூ. 2,740. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை