மேலும் செய்திகள்
சாத்துாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அவசியம்
15-Apr-2025
புதுச்சேரி: புதுச்சேரியில், ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார்.புதுச்சேரி தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து இ.சி.ஆர்., வழியாக சென்னைக்கு அரசு பஸ் நேற்று காலை 6:00 மணியளவில் புறப்பட்டது. மடுவுபேட் அருகே பஸ் சென்ற போது, அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்று பஸ்சை முந்தி சென்றது. அப்போது, சாலையில் இருந்த தடுப்பு கட்டை மீது பஸ் ஏறி, ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில், ஆட்டோவை ஓட்டி சென்ற வாண்ரபேட்டையை சேர்ந்த காளிதாஸ் காயமடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கட்டையில் பஸ் மோதியதில், பஸ் சேதமானது, அதனை தொடர்ந்து பஸ்சில் பயணித்த, அனைவரும் வேறு ஒரு பஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15-Apr-2025