தொழிலதிபரிடம் ரூ. 1.31 கோடி மோசடி
புதுச்சேரி: மதகடிப்பட்டில், டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வரும் தொழிலதிபர், பங்கு சந்தையில் மியூச்சுவல் பண்ட் மூலம் டிரேடிங் செய்து வருகிறார். மர்ம நபரின் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்தார். அதில் உள்ள பலர் பங்கு சந்தையில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதித்துள்ளதாக பொய்யான தகவலை அனுப்பினர்.அதை நம்பி, மர்ம நபரிடம் பணத்தை முதலீடு செய்வது குறித்து, அவர் பேசினார். அவரின் மொபைலுக்கு வந்த செயலி லிங்க் மூலம் 1.31 கோடி ரூபாயை அனுப்பினார். அதனை தொடர்ந்து, அந்த நபரை தொடர்பு கொண்ட போது, இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து, அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.