உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி: வங்க கடலில் ஏற்பட்டுள்ள முரசு புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. முரசு என பெயரிடப்பட்ட இந்த புயல் தென் மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது இன்று (2ம் தேதி) தீவிர புயலாக வலுப்பெறக் கூடும். நாளை மறுநாள் (3ம் தேதி) அதிகாலை ஆந்திராவின் நெல்லுார் மற்றும் நர்சாபூர் இடையே கரையை கடக்ககூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி துறை முகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை