உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மலர், காய், கனி கண்காட்சி பதிவு செய்ய அழைப்பு

மலர், காய், கனி கண்காட்சி பதிவு செய்ய அழைப்பு

காரைக்கால்: காரைக்காலில் கார்னிவல் திருவிழாவையொட்டி மலர், காய் மற்றும் கனி கண்காட்சி போட்டியில் பங்கேற்க பொது மக்களுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைந்து வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை காரைக்காலில் மலர், காய் மற்றும் கனி கண்காட்சி நடக்கிறது. இதில் ஒரு அங்கமாக வேளாண்துறை சார்பில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், நிறுவனத்தோட்டம், பூந்தொட்டி சேகரிப்பு, தானியம், காய் மற்றும் கனிகளைக் கொண்டு படிமம் (கார்விங்) தயாரித்தல் மற்றும் மூலிகை செடிகள் சேகரிப்பு உட்பட பல பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.இப்போட்டியில் அதிகபட்ச பரிசுகளை பெறுவோருக்கு மலர் ராஜா மற்றும் மலர் ராணி விருதுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இப்போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 3ம் தேதி மதியம் 3:00 மணி முதல் 12ம் தேதிக்குள் வேளாண் துறையை அணுகி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை