உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க முகாம்

வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க முகாம்

திருபுவனை : இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, புதுச்சேரி குரும்பாபேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் -2025, கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் நடத்தின.மதகடிப்பட்டு, உழவர் உதவியக வேளாண் அதிகாரி நடராஜன் வரவேற்றார். இணை வேளாண் இயக்குனர் சிவசண்முகம் தலைமை தாங்கி, பிரசார இயக்க முகாமினை துவக்கி வைத்தார். மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குனர் சாந்தி பால்ராஜ் வேளாண் வளர்ச்சிக்கான முக்கியத்துவம் குறித்து விளக்கினார். வேளாண் முயற்சியின் தொழில்நுட்ப உத்திகள் குறித்து வேளாண் நிபுணர் ஜெயந்தி பேசினார்.வேளாண் அறிவியல் நிலைய பொறியாளர் பாஸ்கர் வேளாண்மையில் இயந்திரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். மணிலா விதைப்பு கருவி மூலம் விதைப்பு முறை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வேதியியல் பிரிவு வேளாண் அதிகாரி அருணா மண்வளம்,சமச்சீர் உரம், மற்றும் நுண்னுாட்ட சத்துக்களின் தேவை குறித்து விளக்கமளித்து விவசாயிகளுக்கு மண்வளஅட்டைகளை வழங்கினார்.ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஸ்வரி, ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, செயல்விளக்க உதவியாளர் ஜெய்சங்கர், சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை