மேலும் செய்திகள்
புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு
17-May-2025
புதுச்சேரி : தருமாபுரி செட்டித்தெரு, தனகோடி நகரில் வாய்க்கால் அமைக்கும் பணியினை அரசு கொறடா ஆறுமுகம் பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்திரா நகர் தொகுதியில் உழவர் நகராட்சி மூலம் ரூ. 24.95 லட்சம் மதிப்பீட்டில் தருமாபுரி, செட்டித்தெரு, தனகொடி நகரில் வாய்க்கால் அமைத்தல், திரவுபதி அம்மன் வீதி மற்றும் குறுக்கு சாலைகளில் சிமெண்ட் சாலை அமைத்தல், காந்தி நகர், இ.எஸ்.ஐ., சாலையில் வாய்க்கால் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கான துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, அரசு கொறடாவுமான ஆறுமுகம் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், செயற்பொறியாளர் மலைவாசன், உதவி பொறியாளர் கலிவரதன், இளநிலை பொறியாளர் முத்தையன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
17-May-2025