இந்திரா சதுக்கம் அருகில் வாய்கால் சீரமைப்பு பணி
புதுச்சேரி: இந்திரா சதுக்கம் அருகில் உள்ள வாய்க்கால் சீரமைப்பு பணியில், பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். கடந்த 22ம் தேதி, பெய்த கனமழையில் கனகன் ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து மழைநீர் இந்திரா சதுக்கம் அருகில் உள்ள வாய்க்கால் வழியாக வெளியேறியது. மழைநீர் சாலையில் தேங்கி நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்திரா சதுக்கத்தில் தேங்கி நின்ற மழைநீரை, முதல்வர் ரங்கசாமி பார்வைிட்டார். அடுத்த மழைக்கு இங்கு மழைநீர் தேங்காமல், அப்பகுதியில் உள்ள வாய்க்காலை சீர் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்திடம் உத்தரவிட்டார். அதனையடுத்து, வாய்க்காலில், இரும்பு ரேம்புகள் வைக்கப்பட்டு, தொடர்ந்து வாய்க்காலை, சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.