உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை செல்லும் சாலை அரசு ஐ.டி.ஐ. அருகே வாலிபர் ஒருவர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுாரை சேர்ந்த கார்த்திக் ராஜா, 28; என்பது தெரியவந்தது.இதையடுத்து, கார்த்திக் ராஜாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிந்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை