உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையோர வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து

சாலையோர வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து

பாகூர்: சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சரண் 36, மனோஜ் 27, குழந்தை அகானா 4; ஆகியோர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று இன்று (அக்.,26) காலை எம்.ஜி. பேட்டரி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். நாகை - விழுப்புரம் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்த அவர்கள் பாகூர் சந்திப்பில் கிழக்கு பக்கமாக திரும்பி கன்னியக்கோவில் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஆல்பா கல்லுாரி அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட ஒதுங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருக்கும் சித்தேரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 5 பேரும் காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பித்தனர். தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிரேன் மூலமாக காரை மீட்டனர்.

விபத்துக்கான காரணம்

சாலையோரம் உள்ள சித்தேரி வாய்க்காலில் தடுப்பு சுவர் ஏதும் இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.எனவே இச்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை