உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கேரம் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் சாதனை

கேரம் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி அமெச்சூர் கேரம் அசோசியேஷன் வீரர், வீராங்கனைகள், தேசிய அளவிலான கேரம் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.புதுச்சேரி அமெச்சூர் கேரம் அசோசியேஷன் சார்பில், தேசிய அளவில் நடக்கும் கேரம் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, பல்வேறு பதக்கங்களை வென்று வருகின்றனர். பெண்கள் அணி, கடந்த ஓராண்டில் தேசிய அளவில் 3 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.குறிப்பாக, மதுரையில் நடந்த 48வது ஜூனியர் கேரம் போட்டியில், பெண்கள் அணி அகில இந்திய அளவில் 3ம் இடம் பெற்றது. மார்ச் மாதம், வாரணாசியில் நடந்த 45வது சப் ஜூனியர் கேரம் போட்டியிலும் 3ம் இடம் பிடித்தனர். தனி நபர் பிரிவில் பூஜா 5ம் இடத்தையும், அண்கள் பிரிவில் டோனி 6ம் இடத்தை பிடித்தனர்.மத்திய பிரதேசம் குவாலியரில் நடந்த 49வது ஜூனியர் போட்டியில், பெண்கள் அணி 2ம் இடத்தையும், தனிநபர் பிரிவில் பூஜா 6ம் இடத்தையும், 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் செபாஸ்டின் 8வது இடத்தை பிடித்தும் சாதனை படைத்தனர்.ஆந்திராவில் நடந்த 29வது தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை போட்டியில், புதுச்சேரி வீராங்கனை பூஜா, தனக்கு எதிராக விளையாடிய முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தி தங்க கோப்பை வென்றார். சாதித்த வீரர்களை, பாண்டிச்சேரி அமெச்சூர் கேரம் அசோசியேஷன் தலைவர் ஜெகஜோதி, சங்க செயலாளர் ஞான இருதய ராஜ் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ