மேலும் செய்திகள்
அண்ணனை தாக்கிய தம்பி கைது
27-Sep-2024
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, முதலியார் பேட்டை தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் தசரதன், 47; அரசு ஊழியர். இவருக்கும், இவரது அண்ணன் ராஜு (எ) ராஜூமுகமது இடையே சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் தசரதன் அவரது மனைவி உமா, ராஜூ அவரது மனைவி அனிதா ஆகிய இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் தசரதன் அளித்த புகாரின் பேரில், ராஜூமுகமது, அவரது மனைவி அனிதா மீதும், ராஜூ முகமது அளித்த புகாரின் பேரில் தசரதன், அவரது மனைவி உமா மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Sep-2024