உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காங்., தலைவர் உட்பட 10 பேர் மீது வழக்கு

 காங்., தலைவர் உட்பட 10 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: : கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்., தலைவர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞர் காங்., சார்பில்தலைவர் ஆனந்தபாபு தலைமையில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கடந்த 22ம் தேதி நடந்தது. போராட்டத்தின் போது, தேர்தல் ஆணையர் உருவ பொம்மையை பாடையில் வைத்து துாக்கி வந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்ய முயன்றபோது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து காங்., கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை