உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை 2 பேர் மீது வழக்கு

பொது இடத்தில் ரகளை 2 பேர் மீது வழக்கு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுாரை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பாகூர் போலீஸ் ஏட்டு மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சோரியாங்குப்பம் நவாதோப்பு அருகில் இரண்டு பேர் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ''கடலூர் திருவாசகம் பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த கங்காதரன் 50; திருவந்திபுரம் பிரேம்குமார் 46; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி