போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைத்த 2 பேர் மீது வழக்கு
புதுச்சேரி: சாலையில் அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில், கடை வைத்த இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.வடக்கு போக்குவரத்துக்குட்பட்ட பகுதியில்,போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது,லாஸ்பேட்டை மடுவுபேட்டை சாலையில், விழுப்புரம் அடுத்த வானுாரை சேர்ந்த சித்திக், 26, பெத்து செட்டிபேட்டை அருள், 27, ஆகியோர் போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைத்து வியாபாரம் செய்தனர். அவர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.