உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருவர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

இருவர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

அரியாங்குப்பம்: புதுக்குப்பம் கடற்கரையில் பெண் உட்பட இருவரை தாக்கிய, பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். சென்னை சிருனியம், பார்த்தசாரதி நகரை சேர்ந்தவர்கள் பச்சையம்மாள், 40; சுதாகர். இருவரும் நேற்று முன்தினம், தவளக்குப்பம் அருகே உள்ள புதுக்குப்பம் கடலில் குளித்தனர். ஆழம் அதிகமாக இருப்பதால், அந்த பகுதியில் குளிக்க வேண்டாம் என, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தது ஊழியர் கார்மேகம் கூறினார். இதனால், இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த, கார்மேகம் இவருடன் இருந்த இண்டு பேர் சேர்ந்து, சுதாகரை தாக்கினர். தடுக்க வந்த, பச்சையம்மாளை தாக்கினர். இதுறித்து, புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, கார்மேகம் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை