உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவனுக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு

சிறுவனுக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு

பாகூர் : பாகூர், வேதபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் நரேஷ் 17. அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் யுவராஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க கடந்த 28ம் தேதி சென்றார்.அவ்வழியாக பாகூரைச் சேர்ந்த சூரியா, மாதேஷ், மணி ஆகியோர் வந்தபோது, முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அதில், சூரியா, மாதேஷ், மணி ஆகியோர் நரேஷை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். காயமடைந்த நரேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், சூர்யா, மாதேஷ், மணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி