மேலும் செய்திகள்
மது அருந்திய 8 பேர் மீது வழக்கு
15-Jan-2025
காரைக்கால்: காரைக்காலில் பொது இடத்தில் மது அருந்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு.. காரைக்கால் மாவட்ட கோட்டுச்சேரி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்ட போது நேற்று முன்தினம் பொது இடத்தில் மதுஅருந்திய நபர்களை போலீசார் பிடித்து விசாரணையில் கோட்டுச்சேரி கீழகாசாகுடி சுனாமி நகரை சேர்ந்த ஜெகன், 29; மற்றும் செங்கல்பட்டு மதுராந்ததகம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், 60; ஆகிய இருவர் மீது கோட்டுச்சேரி போலீசார் பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுபோல் நிரவி கருக்காலச்சேரி சுனாமி நகரில் பொது இடத்தில் மதுஅருந்திய ரஞ்சித், 30;என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
15-Jan-2025