உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

அரியாங்குப்பம்: காரின் அருகே பட்டாசு வெடித்ததை தட்டி கேட்டவரை தாக்கிய தம்பதி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அரியாங்குப்பம், சாமிநாத நாயக்கர் வீதியை சேர்ந்தவர் திருச்செல்வம், 53. இவர் வீட்டு அருகில் தனது காரை நிறுத்தியுள்ளார். எதிர் வீட்டை சேர்ந்த கருணாநிதி கா ந்தி, அவரது மனைவி சித்ரா இவரும் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்தனர். கார் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம் என, திருச்செல்வம் கூறியதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, கருணாநிதி காந்தி, அவரது மனைவி சித்ரா, உறவினர்கள் பாபு, தியாகு ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, திருச்செல்வத்தை தாக்கி, மிரட்டல் விடுத்தனர். அவர் கொடுத்த பேரில், தம்பதி உட்பட 4 பேர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ