உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு: 4 பேர் மீது வழக்கு

போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு: 4 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பகுதியில் விற்கப்பட்ட இடத்திற்கு போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, புதுசாரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்ராயன், 71; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ரெட்டியார்பாளையத்தில் உள்ள இடத்தை ஒருவருக்கு கடந்த 1995ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார்.உழவர்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் எடுத்து பார்த்தபோது, அந்த இடம் வேறு சிலர் பெயரில் இருப்பதும், அவர்கள் சுப்புராயன் பெயரிலேயே போலி ஆதார், ஆவணங்கள் தயாரித்ததுடன், போலி கையெழுத்திட்டு இடத்தை பத்திரப்பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது.இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சுப்புராயன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, கோர்ட் உத்தரவின்படி, ரெட்டியார்பாளையம் போலீசார், போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்த புதுச்சேரியை சேர்ந்த உமா மகேஸ்வரி, ஷகிலா, ரம்யா, கணேசராமன் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை