உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

புதுச்சேரி: மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த சரத்குமார், 31, இவரது மனைவி பரமேஸ்வரி, 26, கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. நேற்று முன்தினம், வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்த தனது குழந்தையை தாய் பரமேஸ்வரி அடித்துள்ளார்.இதுபற்றி, தகவலறிந்த, அவரது கணவர், எப்படி குழந்தையை அடிக்கலாம், என கூறி, மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பரமேஸ்வரி புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் சரத்குமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ