உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பல்க லையில் போலி சான்றிதழ் கேரள மாணவர் மீது வழக்கு

 பல்க லையில் போலி சான்றிதழ் கேரள மாணவர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைகழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து விண்ணப்பித்த கேரளா மாணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, சின்ன காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு, முதுகலை பட்டபடிப்பிற்காக கேரளா மாநிலம், கொச்சியை சேர்ந்த மாணவர் சித்தீக், இளகலை பட்டப்படிப்பு சான்றிதழை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். இதையடுத்து, விண்ணப்பத்தை பரிசீலணை செய்த பல்கலைக் கழக நிர்வாகம், மேற்படிப்பிற்காக சித்தீக் சமர்பித்திருந்த தனியார் கல்லுாரியின் மூலம் பெறப்பட்ட பி.காம்., பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என தெரியவந்தது. இது குறித்து பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி வம்சீதர ரெட்டி காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், கேரளா மாணவர் சித்தீக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை