உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘குட்கா’ விற்பனை ஒருவர் மீது வழக்கு

‘குட்கா’ விற்பனை ஒருவர் மீது வழக்கு

பாகூர்: சோரியாங்குப்பத்தில் பெட்டி கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாகூர் போலீசார், நேற்று (நவ.,28) சோரியாங்குப்பம் சென்று அங்குள்ள பெட்டி கடைகளில் சோதனை செய்தனர். ஒரு பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, கடையில் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கடை உரிமையாளரான கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ