உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

புதுச்சேரி, : அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரியில் சாலை பகுதியில் பேனர் வைப்பதால், போக்குவரத்து, நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வருகிறது. அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரெட்டியார்பாளையம் சாலையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக நேற்று முன்தினம் ரோந்து சென்ற பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர் ஜெயராஜ், ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி