உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

 அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

அரியாங்குப்பம்: சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் மீது பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் போலீசில் புகார் அளித்தார். பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் சரவ ணன், தவளக்குப்பம் பகுதி யில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்ட விரோதமாகவும், அனுமதியின்றி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பேனர்கள் வைத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது அவர், தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ