உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு

கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி : முதலியார்பேட்டை, திரு.வி.க., நகரை சேர்ந்தவர் சார்லஸ், 42. இவர் வெளிநாட்டு வேலை தொடர்பாக ஆன்லைனில் தேடியபோது, வெங்கடா நகர், ரெயின்போ நகர் பூங்கா அருகேயுள்ள தனியார் வெளிநாட்டு வேலை நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்வா கார்த்திக், பொது மேலாளர் ஹேமமாலினி, உரிமையாளர்கள் ஜெயா, அஸ்வதா ஆகியோர், கனடா நாட்டில் வேலை இருப்பதாக கூறியுள்ளனர்.பின், வேலைக்கான விசா செயலாக்க கட்டணமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு, வேலைக்கான அனுமதி கடிதம் கனடா நாட்டில் உள்ள நிறுவனத்தில் வழங்கப்படும் என, சுற்றுலா விசா மூலம் கனடாவிற்கு அனுப்பியுள்ளார்.கனடா சென்ற சார்லஸ், அந்த நிறுவனத்தை தேடியபோது, அவர்கள் தெரிவித்த நிறுவனம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. புதுச்சேரி திரும்பிய சார்லஸ் கனடா நாட்டில் வேலை வாங்கி வருதாக கூறி, ரூ.7.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மீது பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்வா கார்த்திக், பொது மேலாளர் ஹேமமாலினி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை