பேனர் வைத்தவர் மீது ளவழக்கு பதிவு
புதுச்சேரி: தடையை மீறி பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.புதுச்சேரியில் பேனர் வைக்க தடை உள்ளது. தடையை மீறி வைப்போர் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் புகார் அளித்து வருகின்றனர். அதன்படி, சுப்பையா சாலை, ஆம்பூர் சாலை சந்திப்பு சோனாம்பாளையம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக பேனர் வைத்த, கல்யாண கோஷ்டியைச் சேர்ந்த பாஸ்கல் என்பவர் மீது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன் புகார் அளித்தார். பாஸ்கல் மீது ஒதியஞ்சாலை போலீசார், திறந்தவெளி அழகு சீர்கெடுத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.