உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முந்திரி வியாபாரி பண விவகாரம் இன்ஸ்., ஆயுதப்படைக்கு மாற்றம்

முந்திரி வியாபாரி பண விவகாரம் இன்ஸ்., ஆயுதப்படைக்கு மாற்றம்

புதுச்சேரி : உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி பஸ் நிலையத்தில் அக்டோபர் 21ம் தேதி இரவு மதுபோதையில் இருந்த முந்திரி வியாபாரியை உருளையன்பேட்டை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்ததை அடுத்து, அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். போதை தெளிந்த அந்த நபர் தான் கொண்டு வந்த பணத்தை போலீசாரிடம் கேட்டார்.அதற்கு போலீசார் உனக்கு தெரிந்த நபர்கள் யாராவது தெரிவிக்கும்படி கூறினர். இதையடுத்து புதுச்சேரியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர் போலீசாரை தொடர்பு கொண்டு முந்திரி வியாபாரியிடம் பணம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.அதில் சில லட்சங்கள் குறைவாக முந்திரி வியாபாரியிடம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி முதல்வர் ரங்கசாமியிடம் முறையிட்டார். இதையடுத்து போலீசார் வைத்திருந்த சில லட்சம் பணம் வியாபாரியிடம் கொடுக்கப்பட்டது. இந்த பிரச்னை புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்தது.இந்நிலையில், டி.ஜி.பி., ஷாலினி சிங் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சத்தியநாராயண், அவருக்கு உடந்தையாக இருந்த போலீஸ் மாதவன், ஸ்டாலின் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இப்பிரச்னை தொடர்பாக எஸ்.பி., தலைமையில் துறை ரீதியாக விசாரிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை