உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ இட ஒதுக்கீட்டில் முறைகேடு சி.பி.ஐ., நடவடிக்கைக்கு கோரிக்கை

மருத்துவ இட ஒதுக்கீட்டில் முறைகேடு சி.பி.ஐ., நடவடிக்கைக்கு கோரிக்கை

புதுச்சேரி, : புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் படிக்க என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீட்டில் முறைகேடாக சேர்ந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா, கன்வீனர் செர்லின் சிவம், மருத்துவ கலந்தாய்வு நோடல் அதிகாரி செவ்வேல் ஆகியோரிடம், சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் படிக்க, என்.ஆர்.ஐ., இடஒதுக்கீட்டில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் முறைகேடாக சேர்ந்த மாணவர்களை நீக்க வேண்டும். தகுதியான புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு காலியாகும் மருத்துவ இடங்களை கொடுக்க வேண்டும்.இதில் முறைகேடாக சேர முயற்சித்த மற்றும் சேர்ந்துள்ள மாணவர் விபரங்களை, பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும், சி.பி.ஐ., விசாணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ