உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிமென்ட் சாலை பணி துவக்கம்

சிமென்ட் சாலை பணி துவக்கம்

புதுச்சேரி: சோலை நகர், சுனாமி குடியிருப்பு கல்லறை வீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சாய் சரவணன்குமார், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர்.முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பு, தெற்கு பகுதி அருகேயுள்ள கல்லறை வீதியில் பாட்கோ மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, அமைச்சர் சாய் சரவணன் குமார், தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ் குமார் ஆகியோர் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தனர்.இதில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், செயற்பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் கார்த்திக், அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை