உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதுநிலை பல் மருத்துவ இடங்கள் திருத்தங்களுடன் சென்டாக் வெளியீடு

முதுநிலை பல் மருத்துவ இடங்கள் திருத்தங்களுடன் சென்டாக் வெளியீடு

புதுச்சேரி : கல்லுாரி வாரியாக நிரப்பப்பட உள்ள எம்.டி.எஸ்., இடங்களை திருத்தங்களுடன் சென்டாக் வெளியிட்டுள்ளது.சென்டாக் முதுநிலை பல் மருத்துவ படிப்பான எம்.டி.எஸ்., இடங்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நீட் தேர்வு எழுதிய இளநிலை மருத்துவ மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 59 மாணவர்கள், நிர்வாக இடங்களுக்கு 32 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்ப பரிசீலனை முடிந்து இறுதி தரவரிசை பட்டியல் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது.மறுநாள் 11ம் தேதி, பல் மருத்துவ கல்லுாரி வாரியாக நிரப்பப்பட வேண்டிய இடங்களை சென்டாக் வெளியிட்டது. இதில் சில திருத்தங்களை சேர்த்து இந்தாண்டு நிரப்ப வேண்டிய இடங்களை மீண்டும் சென்டாக் வெளியிட்டுள்ளது.புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீடு-9, என்.ஆர்.ஐ.,-1, அகில இந்திய ஒதுக்கீடு என மொத்தம் 19 எம்.டி.எஸ்., சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன. மாகி பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 7, நிர்வாக இடங்கள்-7 என மொத்தம் 14 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன. இதேபோல் வெங்கடேஷ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்-7, நிர்வாக இடங்கள்-7 என 14 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன. மூன்று மருத்துவ கல்லுாரிகளில் மொத்தமுள்ள 47 எம்.டி.எஸ்., இடங்களில் இந்தாண்டு 23 சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்பட உள்ளன. இட ஒதுக்கீட்டு ரீதியாக பார்க்கும்போது இவை, பொது-11, இ.டபுள்யூ.எஸ்.,-1, ஓ.பி.சி,.-2, எம்.பி.சி.,-4, எஸ்.சி.,-4, முஸ்லீம்-1 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மேலும், உள் ஒதுக்கீடாக விடுதலை போராட்ட வீரர் வாரிசு-1, மாற்றுத்திறனாளிகள்-1 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில் உள்ள 9 அரசு ஒதுக்கீட்டு சீட்டுகள் பொது-3, இ.டபுள்யூ.எஸ்.,-1, எம்.பி.சி.,-2, எஸ்.சி.,-1, முஸ்லீம்-1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் என சென்டாக் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !