உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய மதிப்பீட்டுக்குழுவினர் முதல்வருடன் ஆலோசனை

மத்திய மதிப்பீட்டுக்குழுவினர் முதல்வருடன் ஆலோசனை

புதுச்சேரி: மத்திய மதிப்பீட்டுக் குழுவினர் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்த பேசினர். புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள, தேசிய தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை இயக்குநர் (ஆராய்ச்சி) இந்திரகுமார் தலைமையிலான மத்திய மதிப்பீட்டுக் குழுவினர் நேற்று சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அப்போது, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்க ஏற்படுத்தியுள்ள மாநில அளவிலான திஷா கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்து முதல்வருடன் கலந்துரையாடினர். அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை துரிதப்படுத்தி, சிறப்பாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குழுவினரை கேட்டுக் கொண்டார். மேலும், மத்திய நிதியுதவி மற்றும் மத்தியத் துறைத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் குறித்து மத்திய குழுவினரிடம், முதல்வர் கேட்டறிந்தார். மத்திய மதிப்பீட்டுக்குழுவைச் சார்ந்த மார்ஷல் பிர்வா, சைத்தாலி ராய், ஊரக வளர்ச்சி முகமையின் மாநில திட்ட மேலாளர் பவானி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ