உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வனத்துறை அதிகாரிக்கு தலைவர் பதவி? பா.ஜ.,வில் வெடித்தது புதிய பூகம்பம்

வனத்துறை அதிகாரிக்கு தலைவர் பதவி? பா.ஜ.,வில் வெடித்தது புதிய பூகம்பம்

புதுச்சேரி பா.ஜ., தலைவராக வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி பெயர் அடிப்படுவதை தொடர்ந்து பா.ஜ.,வில் புதிய பூகம்பம் வெடித்துள்ளது.புதுச்சேரி பா.ஜ.,வின் புதிய தலைவர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. பா.ஜ., தலைவராக செல்கணபதி எம்.பி., தொடர்வாரா அல்லது புதிய தலைவர் போடப்படுவரா என்று பா.ஜ.,வில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.புதிய தலைவர் பதவிக்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் பெயர்களும் அடிப்படுகின்றன. அத்துடன், புதுச்சேரியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட வனத் துறை அதிகாரி சத்தியமூர்த்தி பெயரும் அடிபடுகிறது. அவர், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் செயல்படுத்தியதால் அனைத்து கிராம பகுதிகளிலும் பரவலாக செல்வாக்கு உள்ளது. அவரை பா.ஜ., மாநில தலைவராக நியமிக்கலாம் என, பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிந்துள்ளனர்.ஜான்குமார் எம்.எல்.ஏ., ஒருபடி மேலேபோய், பா.ஜ., மாநில செல்வகணபதி இல்லையென்றால் வனத் துறை அதிகாரி சத்தியமூர்த்தியை போடலாம். அவர், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் தலைமையின் முடிவுக்கு கட்டுபடுவோம் என, சர்டிபிகேட் கொடுத்தார். இது பா.ஜ., வில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.ஜான்குமார் எம்.எல்.ஏ., கருத்திற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர், புதுச்சேரியில் இவ்வளவு மக்கள் செல்வாக்கு உள்ள அதிகாரி இருந்தும் ஏன் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோற்றது என்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.கட்சிக்கு ஓடி ஓடி உறுப்பினர் சேர்த்தார்களே அவர்களெல்லாம் செல்வாக்கு இல்லாதவர்களா. மத்தியில் இருந்து வந்து நிர்வாகிகளிடமும் கட்சி தொண்டர்களிடமும் கருத்து கேட்டார்களே அதெல்லம் கண்துடைப்பா.புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் அந்தந்த தொகுதியில் நின்ற வேட்பாளர்களை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் வெற்றிபெற்றார்கள். எந்த வனத் துறை அதிகாரிகளும் அவர்களுக்கு வேலை செய்யவில்லை.புதுச்சேரியில் அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரை கட்சித்தலைவராக நியமித்தால் கட்சி வளர்ச்சிக்கு உதவும். அதைவிடுத்து வனத் துறை அதிகாரியை கொண்டுவந்து கட்சிக்கு தலைவராக நியமித்தால் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்று கடுமையாக விமர்த்துள்ளார்.புதிய தலைவர் யார் என்று பா.ஜ., அறிவிக்காமல் மவுனம் காத்துக்கொண்டு இருக்க, புதுச்சேரி பா.ஜ.,வில் தினமும் ஒருவரது பெயர் அடிப்பட்டு புயலை வீசி வருகிறது. பா.ஜ.,வில் உச்சக்கட்ட குழப்பமும் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ