உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  செலவின பார்வையாளர் சந்திப்பு நேரம் மாற்றம்

 செலவின பார்வையாளர் சந்திப்பு நேரம் மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவினப் பார்வையாளர்களைச் சந்திக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி செய்திக்குறிப்பு: கடந்த 26ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த செலவினப் பார்வையாளர் சந்திப்பு நேரம், தற்போது நிர்வாக காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வில்லியனுார் மற்றும் மங்கலம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான செலவினப் பார்வையாளராக சுதா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினர் தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மதியம் 3:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஜிப்மர் கெஸ்ட் ஹவுஸ்-2ல் நேரில் சந்திக்கலாம். மேலும், gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது 8925805245 என்ற மொபைல் எண் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை