உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரசாயன கலன் வெடித்து 15 பேருக்கு மூச்சுத்திணறல்

 ரசாயன கலன் வெடித்து 15 பேருக்கு மூச்சுத்திணறல்

புதுச்சேரி: புதுச்சேரி, திருப்பட்டினம் வடக்கு வாஞ்சூரில், ' கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட்' என்ற ரசாயன தொழிற்சாலையில், பி.வி.சி., எனப்படும் 'பாலி வினைல் குளோரைடு'க்கான மூலப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தொழிற்சாலையில், 'எத்திலின் டை குளோரைடு' சேமித்து வைக் கப்பட்டிருந்த கலன், நேற்று காலை, பலத்த சத்தத்துடன் வெடித்து, தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், 100 அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்ததால், தொழிற்சாலையை சுற்றியுள்ள வடக்கு வாஞ்சூர் மக்கள் கண் எரிச்சலாலும், 15 பேர் மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டனர்; பலர் மயக்கம டைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை