மேலும் செய்திகள்
போதையில் தகராறு கை துண்டிப்பு
30-Oct-2024
புதுச்சேரி : புதுச்சேரி 45 அடி சாலையில் பேஷன் ஜூவல்லரி கடைக்குள் புகுந்து, மதுபோதையில் தீப்பெட்டி கேட்டு பெண்களை மிரட்டிய,சென்னை போட்டோகிராபரை போலீசார் கைது செய்தனர்.முத்தியால்பேட்டை, விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர், 45 அடி வள்ளார் சாலை, தமிழ்சங்கம் அருகே பேஷன் ஜூவல்லரி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சாருமதி, 27; கலைவாணி, 26; பவானி, 26; என்ற மூன்று பெண்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் 2:00 மணிக்கு கடைக்கு வந்த மர்ம நபர், தீப்பெட்டி கேட்டார்.தீப்பெட்டி இல்லை என கடை பெண்கள் தெரிவித்தனர். கடைக்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, ஆநாகரிகமாக பேசி, கடையின் பூஜை இடத்தில் இருந்த தீப்பெட்டி எடுத்து கடைக்குள்ளே சிகரெட் பற்ற வைத்து விட்டு மிரட்டிச் சென்றார்.மர்ம நபர் மிரட்டிய சம்பவம் சி.சி.டி.வி., வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, சந்திரசேகரனிடம் புகார் பெற்ற பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் சென்னை, செங்குன்றம், எடப்பாளையம், ஜீவா நகரைச் சேர்ந்த போட்டோ ஸ்டுடியோ நடத்தும் போட்டோகிராபர் பழனி, 44; என்பதும், நண்பர்களுடன் புதுச்சேரிக்கு 45 அடி சாலையில் உள்ள மதுபான பாரில் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். நண்பர்களிடமே பழனி தகராறு செய்ததால் மற்ற 2 நண்பர்கள் பழனியை காரில் இருந்து இறக்கிவிட்டு சென்னை புறப்பட்டனர்.பழனி மீண்டும் 2வது முறையாக கடைக்கு சென்று குடித்துள்ளார். போதை தலைக்கேறிய பழனி பேஷன் ஜூவல்லரி கடைக்குள் புகுந்து பெண்களை மிரட்டியது தெரியவந்தது.சென்னை சென்ற போலீசார், பழனியை கைது செய்து புதுச்சேரி கொண்டு வந்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பழனி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட பழனி, 'புதுச்சேரி மக்களே என்னை மன்னித்து விடுங்கள். அதிக மதுபோதையில் 3 பெண்களிடம் தவறாக பேசிவிட்டேன். மூன்று பெண்களும் என்னை மன்னித்து விடுங்கள். புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் இதுபோல் யாரும் செய்யாதீர்கள். பெண்கள் நம் நாட்டு கண்கள் என மன்னிப்பு கேட்கும் வீடியோவை பெரியக்கடை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
30-Oct-2024