உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளியில் சதுரங்கப் போட்டி

ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளியில் சதுரங்கப் போட்டி

புதுச்சேரி : கருவடிக்குப்பம் ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைபள்ளி ராயல் விஷன் செஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலானபார்வையற்றோர்களுக்கான சதுரங்கப் போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது. போட்டியை, பள்ளி தாளாளர் கணேசன் துவக்கி வைத்து, மாணவர்களிடையே தன்னம்பிக்கை குறித்து பேசினார். இப்போட்டியில் 80 பார்வையற்ற மாணவர்கள் கலந்துக்கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ராமகிருஷ்ண வித்யாலயா மேல் நிலைப்பள்ளி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !